தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைக்களஞ்சியமும் கூட! ஆம். சிற்பம், ஓவியம் இசை, பரதம் மற்றும் இதர கலைகளில் எண்ணற்ற பல வல்லுனர்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது தஞ்சைதான். இசைக்கலையில் பல வாக்கேயக்காரர்களும், வல்லுனர்களும் அதிகளவில் தோன்றியது தஞ்சை மண்ணில்தான். செம்மங்குடி, மகாராஜபுரம், திருவாவடுதுறை, நீடாமங்கலம் போன்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சிற்றூர்களின் பெயர்களே, அந்தந்த சிற்றூர்களில் தோன்றி புகழ் பெற்று விளங்கிய இசைவல்லுனர்களின் பெயரை உலகறியச் செய்யும்.
இத்தகைய சீரும் சிறப்பும் கொண்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூரில், இசைப்பாரம்பரியம் கொண்ட திரு. வேணுகோபால் பிள்ளை திருமதி.சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்து, முன்னணி தவில் இசைக்கலைஞராக விளங்கியவர் "திருவிடைமருதூர் திரு.டி.வி. வெங்கடேசன்" ஆவார். இவரை தமிழ் இசையுலகம் இன்று போற்றவில்லை என்றாலும், இவரது தவிலிசையை இன்று வரை போற்றாத இசை ரசிகர்களே இல்லை எனலாம். ஆம், புகழ்பெற்ற 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் பின்னணியில் தவில் வாசித்தவரும், அதில் இடம்பெறும் தவில் கோர்வைகளை வடிவமைத்தவரும் இவரே ஆவார். இவருடன் இணைந்து தவில் வாசித்த மற்றொரு தவில் கலைஞர், தேவூர் சந்தானம் பிள்ளையாவார்.
திரு.வெங்கடேசன் அவர்கள், பிரபல நாதஸ்வர மேதைகள் திருவாவடுதுறை திரு. டி. என். ராஜரெத்தினம் பிள்ளை மற்றும் திருவிடைமருதூர் திரு. பி.எ.ஸ். வீருசாமி பிள்ளை ஆகியோருக்கு நெருங்கிய உறவினராவார்.
திரு.டி.என். ராஜரெத்தினம் பிள்ளை அவர்களின் சிறிய தாயாரும், நாதஸ்வர வித்வான் திருமருகல் திரு. நடேச பிள்ளை அவர்களின் சகோதரர் நாதஸ்வரவித்வான் திரு. கதிரேசன் பிள்ளை அவர்களின் மனைவியுமான திருமதி. ரெங்கநாயகி அம்மாள், திருவிடைமருதூர் திரு.டி.வி. வெங்கடேசன் அவர்களின் தந்தை திரு.டி.ஜி.வேணுகோபால் பிள்ளை அவர்களின் உடன்பிறந்த மூத்த சகோதரி ஆவார். திருவாடுதுரை திரு டி.என். ராஜரெத்தினம் பிள்ளை அவர்கள் தனது சிறிய தாயார் திருமதி.ரெங்கநாயகி அம்மாள் அவர்களிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
திருவிடைமருத}ர் திரு.பி.எஸ். வீருசாமிபிள்ளை அவர்களின் தாயார் திருமதி. அபயாம்பாள் அம்மாள் அவர்களும், திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்களது தந்தை வழிப் பாட்டியர் திருமதி.திருநாகவல்லி அம்மாள் அவர்களும் உடன் பிறந்த சகோதரிகள். இச்சகோதரியருக்கு நயினி என்ற மற்றொரு சகோதரியும் இருந்தார்.
பாரம்பரிய இசைஞானம் கொண்டிருந்த திரு.டி.வி. வெங்கடேசன் தனது இளம் பிராயத்தில் பிரபல தவில் விற்பன்னராக இருந்த திருவாளப்புத்தூர் திரு. பசுபதி பிள்ளை அவர்களிடம் குருகுலம் பயின்றார்.
தனது 10வது வயதுமுதல் பிரபல நாதஸ்வர வித்வான் திருவிடைமருதூர் திரு.பி.எஸ். வீருசாமி பிள்ளை அவர்களின் குழுவில் சுமார் 20 வருட காலத்திற்கும் மேலாக இருந்து, பிரபல நாதஸ்வர மேதைகளான திருவாவடுதுறை திரு.டி.என். ராஜரெத்தினம் பிள்ளை, செம்பனார் கோவில் சகோதரர்கள், திருவாவடுதுறை “கக்காயி” திரு.டி.என். ஆர். நடராஜசுந்தரம் பிள்ளை, குளிக்கரை திரு. எஸ் பிச்சையப்பா பிள்ளை, திருவெண்காடு திரு.டி.பி.சுப்பிரமணியப் பிள்ளை, அம்பலப்புழை சகோதரர்கள் கே. சங்கரநாராயணப் பணிக்கர் - கே. கோபால கிருஷ்ணப் பணிக்கர, காருகுறிச்சி திரு. பி அருணாசலம், நாமகிரிப்பேட்டை திரு.கே. கிருஷ்ணன், திருமெஞ்ஞானம் திரு. டி.பி. நடராஜசுந்தரம் பிள்ளை, மதுரை சகோதரர்கள் எம்பி.என். சேதுராமன் எம்.பி.என். பொன்னசாமி, கரவடி திரு.ஷேக் சின்ன மவுலானா போன்ற அனைத்து முன்னணி நாதஸ்வர வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளிலும் சிறப்புத் தவிலாக வாசித்துள்ளார்.
பிரபல தவில் வித்வான்களாக திகழ்ந்த திருக்கடையூர் திரு. சின்னையா பிள்ளை, கூரைநாடு திரு. பழனிவேல் பிள்ளை, நீடாமங்கலம் திரு.என்.டி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோவில் திரு.பி.இராகவப்பிள்ளை, திருமுல்லைவாயில் திரு.முத்துவீருபிள்ளை, கும்பகோணம் திரு.கே.ஏ.தங்கவேல் பிள்ளை, கூரைநாடு திரு. கோவிந்தராஜ் பிள்ளை, நீடாமங்கலம் திரு.என்.டி.எம்.சண்முகவடிவேல் பிள்ளை, வலங்கைமான் திரு.ஏ.சண்முகசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை மற்றும் வலையப்பட்டி திரு.ஏஆர். சுப்பிரமணியம் போன்றவர்களால் போற்றிப் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டவர் திரு.டி.வி. வெங்கடேசன் ஆவார். தவில் வாசிப்பில், இவரது வித்வத் திறமை இன்றளவும் அனைவராலும் பெரிதும் போற்றி மதிக்கப்படுகிறது.
1973-ஆம் ஆண்டில் நாதஸ்வர வித்வான் டாக்டர்.திரு.ஷேக் சின்னமவுலா அவர்களுடன் அமெரிக்கா கனடா உள்ளிட்ட அமெரிக்க ஐக்கியநாடுகளில் இரண்டு மாத காலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தியும், அமெரிக்க ஐக்கிய நாட்டு பல்கலைக் கழகத்தில் தவிலின் சிறப்புகள் குறித்தும் உரைநிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் இசைநிகழ்ச்சிகள் நடத்திய இரண்டு மாத காலத்தில், அமெரிக்கர் ஒருவருக்கு தவில் பயிற்றவிக்கவும் தவறவில்லை. இவ்வாறு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தவில் மற்றும் அதன் மேன்மை குறித்து அமெரிக்கர்கள் முதன் முதலாக அறியச் செய்தவர், திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்களே ஆவார்
982- ஆம் ஆண்டு ஆங்காங்கில் நடைப்பெற்ற ஆசிய இசைவிழாவில், டாக்டர்.திரு.ஷேக் சின்னமவுலானா அவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியில் பங்கேற்று தவில் வாசித்து, ஆங்காங் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றவர். அதே ஆண்டில் (1982) முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் நினைவு நாளில், காலஞ்சென்ற பாரதப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி முன்னிலையில் அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்ற திரு. ஷேக்சின்னமவுலானா அவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியில் பங்கேற்று தவில் வாசித்து, திருமதி. இந்திரா காந்தி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.
இவ்வாறு திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கன் தனது இளவயது முதல் தமிழகம் மட்டுமல்லாது, டெல்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், மைசூர், போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து சபாக்களிலும், பல முன்னணி நாதஸ்வர வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக தவில் வாசித்து, அனைத்து நாதஸ்வர-தவில் வித்வான்களாலும், பிற இசைக் கலைஞர்களாலும், கர்நாடக இசை ரசிகர்களாலும், அவ்வப்போது பத்திரிக்கை விமரிசகர்களாலும் சிறந்த தவில் வித்வானாக பாராட்டப்பெற்ற ஏராளமான சம்பவங்களைக் கூறலாம்.
உதாரணமாக, நாதஸ்வர வித்வான்கள் எம்.பி.என்.சேதுராமன்-எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்களால் மதுரையில் நடத்தப்பட்ட நாதஸ்வர வித்வான் திரு.எம்.கே.என்.பொன்னுசாமிப் பிள்ளை அவர்களது நினைவு நாள் பட ஊர்வல விழாவில் நடைப்பெற்ற திருமெய்ஞானம் திரு.டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர இசைநிகழ்ச்சியில், பிரபல தவில் வித்வான் யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்களுடன் இணையாகப் பங்கேற்று சிறப்பாக தவில் வாசித்த திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கள் தனது தனித்தன்மையைப் பெரிதும் மிளிரச் செய்து, திருவாளர்கள் எம்.பி.என்.சேதுராமன்-எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்கள் நாதஸ்வர வித்வான் திரு.டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை தவில் வித்வான் யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை மற்றும் மதுரையைச் சேர்ந்த அனைத்து நாதஸ்வர தவில் வித்வான்களாலும் இதர இசைக்கலைஞர்களாலும் இசைப் பிரியர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க சம்பவங்களுள் ஒன்றாகும்.
இவர், சுமார் 60 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தவில் ஒரு பக்க வாத்தியம் என்ற வகையில், நாதஸ்வர வித்வான்களுக்குப் பக்குவமாக வாசித்து நிகழ்ச்சிகளைப் பரிமளிக்க செய்யக் கூடியவராகவும்,. வித்வான் என்ற வகையில் தவிற் வாசிப்பில் தனது தனித் திறமையை வெளிப்படுத்தி வித்வத் தன்மையை மிளிரச் செய்யக் கூடியவராகவும் விளங்கினார்.
மிகவும்
சாதுவான
திருவிடைமருதூர்
திரு.டி.வி.வெங்கடேசன்
அவர்கள்
எந்த
விதமான
தீய
பழக்க
வழக்கங்;களுக்கும்
அடிமையாகாதவர்.
அடக்கமே
உருவானவர்.
கதராடைகளைத்
தவிர
வேறெந்த
உடையும்
அணியாத
மிகப்பெரிய
தேசீயவாதி.
செய்யும்
தொழிலை
வர்த்தக
ரீதியில்
கருதாமல்
இறைவனுக்கு
உரித்தான
கலையாகக்
கருதி
செயல்பட்டு
வாழ்ந்தவர்.
தனது
மூத்த
கலைஞர்களுக்கு
தக்க
வகையில்
மதிப்பளிக்கும்
உயரிய
பண்பாளர்.
சுயவிளம்பரம்
விரும்பாதவர்.
தனது
சுயநல
அடிப்படையில்
எவ்வித
முயற்சியும்
மேற்கொள்ளாதவர்.
நாதஸ்வர
வித்வான்கள்
சபா
செயலாளர்கள்
பத்திரிக்கையாளர்கள்
இசை
விமரிசகர்கள்
சக
இசைக்கலைஞர்கள்
மற்றும்
கர்நாடக
இசை
ரசிகர்கள்
மத்தியில்
அணுகமுறை
மேற்கொள்வதில்
மற்ற
கலைஞர்களைக்
காட்டிலும்
பெரிதும்
வித்தியாசமாகக்
காணப்பட்டாலும்
உண்மையில்
சிறிதும்
கர்வம்
இல்லாதவர்.
தனது
மூத்த
சக
இளைய
கலைஞர்கள்
மத்திய-மாநில
அரசுகள்
தமிழ்நாடு
இயல்-இசை-நாடகசங்கம்
சபாக்கள்
மற்றும்
இதர
அமைப்புகள்
மூலம்
அவ்வப்போது
கவுரவிக்கப்படும்
சமயங்களில்
பொறாமை
ஏதுமின்றி
தானும்
ஒரு
கலைஞர்
என்ற
முறையில்
பெருமைப்
படக்கூடியவர்.
தவில்
வாசிப்பு
மட்டுமின்றி
தவில்
இசை
பயிற்றுவித்தலிலும்
சிறப்பாகச்
செயல்பட்டு
வந்தவர்.
தவில்
வாசிப்பில்
பல
கலைஞர்களைப்
பக்குவமடையச்
செய்துள்ளார்.
அனேக
இளங்கலைஞர்கள தனதுவாழ்நாளின் இறுதி காலத்திலும்
வீட்டிலேயே
உணவு
உறைவிடம்
அளித்து
குருகுல
முறையில்
பயிற்சியளித்து
வந்த
திரு.டி.வி.வெங்கடேசன்
அவர்கள்
கடந்த
09.02.2007 அன்று
இம்மண்ணுலுகை
விட்டுப்
பிரிந்தார்
நன்றி : திரு. டி.வி.கணேசன் அவர்கள்.
No comments:
Post a Comment