கர்னாடக
இசையில், அடிப்படைச்
சுரங்கள் சட்சமம்,
ரிஷபம்,
காந்தாரம்,
மத்திமம்,
பஞ்சமம்,
தைவதம்,
நிஷாதம்
என ஏழு சுரங்களாகும். இந்த ஏழு சுரங்களும் ஒரு ராகத்தின் ஆரோகண அவரோகணத்தில்
முழுமையாக வரும்பொழுது அவை, மேளகர்த்தா
என்றும் தாய் ராகம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஏழு சுரங்கள், பன்னிரண்டாகி பின்பு பதினாறாகி எவ்வாறு 72
மேளகர்த்தாக்களாக விரிவடைகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
ச ரி க ம ப
த நி என்ற ஏழு சுரங்களில் ச வும், ப
வும் மாறாத நிலையான சுரங்களாகும். மற்ற ரி க ம த நி என்ற ஐந்து சுரங்களும் முறையே
இரண்டு வகைப்படும். இதனால், கூடுதலாக
ஐந்து சுரங்கள் உண்டாகி மொத்தம் 5+5+2 = 12 சுரங்களாகின்றன.
எனவே, இசையில்
மொத்தம் 12 சுரங்கள்
உள்ளன. இதன் மூலமாகவே ராகங்கள் உருவாகின்றன. இதை,
வீணையில் உள்ள பன்னிரண்டு மெட்டுகள்
மூலமாக நாம் உணர முடியும்.
இந்த 12
ஸ்வரங்கள் மூலமாகவே பெரும்பாலான ராகங்கள் உருவாகின்றன. ஆனால்,
17 நூற்றாண்டைச் சேர்ந்த வெங்கடேஸ்வர தீட்சிதர்
எனும் வேங்கடமகி அவர்கள், தனது
சதுர்தண்டி பிரகாசிகை எனும் நூலில், 12
ஸ்வரங்களோடு மேலும் 4
சுரங்களைக் கூட்டி பதினாறு சுரங்களாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் 72 மேளகர்த்தா
ராகங்களை உருவாக்கியுள்ளார்.
வேங்கடமஹி அவர்கள்
கூறியுள்ள நான்கு சுரங்களுக்கும் தனியான ஸ்வரஸ்தானங்கள் கிடையாது. இது,
மற்ற
ஸ்வரத்தின் இடத்திலேயே செயற்கையாக பாடப்படுகிறது. அதாவது,
ரி
க த நி என்னும் சுரங்களில் சதுஸ்ருதி ரிஷபத்தின் (ரி 2)
இடத்தில்
சுத்த காந்தாரத்தையும், சாதாரண
காந்தாரத்தின் (க 1) இடத்தில்
சட்சுருதி ரிஷபத்தையும் உருவாக்கினார். அது போல சதுஸ்ருதி தைவதத்தின் (த 2)
இடத்தில்
சுத்த நிசாதத்தையும், கைசிகி
நிசாதத்தின் இடத்தில் சட்சுருதி தைவதத்தையும் உருவாக்கினார். இதனால் 16
சுரங்கள் உருவானது. இதன் மூலம் 72
மேளகர்த்தாவை அவர் உருவாக்கினார்.
பன்னிரண்டு
ஸ்வரங்கள் பதினாறாவது :
ச - சட்சமம்
ரி
1 - சுத்த
ரிஷபம்
ரி
2 - சதுஸ்ருதி
ரிஷபம் - சுத்த
காந்தாரம்
க
1 - சாதாரண காந்தாரம் -
சட்சுருதி
ரிஷபம்
க
2 - அந்தர
காந்தாரம்
ம
1 - சுத்த
மத்திமம்
ம
2 - பிரதி
மத்திமம்
ப - பஞ்சமம்
த
1 - சுத்த
தைவதம்
த
2 - சதுஸ்ருதி
தைவதம் -
சுத்த
நிசாதம்
நி
1 - கைசிகி
நிஷாதம் -
சட்சுருதி
தைவதம்
நி
2 - காகலி
நிஷாதம்
சுத்த
காந்தாரம், சட்சுருதி
ரிஷபம், சுத்த
நிஷாதம், சட்சுருதி
தைவதம் என்ற நான்கு ஸ்வரங்களும் விவாதி ஸ்வரங்கள் என்றும்,
இதில்
அமைந்த ராகங்கள் விவாதி ராகங்கள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையான 12 ஸ்வரங்கள்
மூலமாக உருவாகும் 32 மேளகர்த்தா ராகங்களும்,
விவாதி
ஸ்வரங்கள் மூலமாக உருவாகும் 40 மேளகர்த்தா ராகங்களும் சேர்ந்து 72 ஆகின்றன.
வேங்கடமஹி அவர்கள்
இயற்றிய
இந்த முறை, அவரது
காலத்தில் பின்பற்றப் படவில்லை. பிற்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளில் ஸ்ரீ
முத்துஸ்வாமி தீட்சிதரும், ஸ்ரீ
தியாகராஜரும் இம்முறையைப் பின்பற்றி கீர்த்தனைகளை பாடியதால் இம்முறை புகழ்
பெற்றது. முமூர்த்திகளைத் தொடர்ந்து, மகா
வைத்தியநாதய்யர் , கோடிஸ்வரய்யர்,
யாழ்ப்பாணம்
வீரமணி அய்யர், டாக்டர்
பாலமுரளி கிருஷ்ணா, என்.எஸ்.
சிதம்பரம் போன்றோர்,
72 மேளகர்த்தாவிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர்.
இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் 72 மேளகர்த்தா
முறை எங்கும் பரவிய போது தொடக்கத்தில் இசைக்கலைஞர்களிடையே சர்ச்சைகளையும் குழப்பத்தையும்
உண்டாக்கியது. மதுரை நாகசுர வித்வான் திரு.எம்.பொன்னுசாமி பிள்ளை வேங்கடமகியின்
கொள்கையையும், 72 மேளகர்த்தா
முறையையும் மறுத்து 'பூர்வீக
சங்கீத உண்மை ' எனும்
நூலை வெளியிட்டார். ஆனால், மாற்றம்
ஒன்றே மாறாதது என்ற இயற்கையின் விதியின் படி,
இன்று
அனைவராலும் 72 மேளகர்த்தா
முறை ஏற்றுக் கொள்ளப்பட்டு, கர்னாடக
சங்கீதத்தின் இலக்கணமாகவும்
விளங்குகிறது.
No comments:
Post a Comment